பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டு துறைகளும் பலப்படுத்தப்படும்போதே ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகரமுடியும்!
இலங்கை ஜனநாயக முன்னணியின் தேசிய தலைவர் ஏ.பி.கமால்டீன் தெரிவிப்பு!
(அபு அலா)
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிவாரண விலையில் மின்சார மோட்டார் சைக்கிள்களை (Electric Bikes) வழங்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எடுத்துள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது. எனினும், ஒரு நாட்டின் அத்தியவசிய சேவைகளில் முதன்மையானதாகக் கருதப்படும் சுகாதாரத்துறையினரையும் இத்திட்டத்தில் இணைப்பது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும் என்று இலங்கை ஜனநாயக முன்னணியின் தேசிய தலைவர் ஏ.பி.கமால்டீன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) இலங்கை ஜனநாயக முன்னணியின் அட்டாளைச்சேனை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியவசிய சேவைகளின் சமநிலை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொலிஸ்த்துறை எவ்வளவு முக்கியமோ, அதேயளவு மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் சுகாதாரத்துறையும் முக்கிய பங்காற்றுகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 24 மணிநேர கடமையில் ஈடுபடுவது போலவே, வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் எந்நேரமும் அழைப்புக்குத் தயாராக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கும், போக்குவரத்துச் சவாலுக்கும் மத்தியில் தங்களின் பணியினை அன்றாடம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய எரிபொருள் விலை ஏற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரக் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் சுகாதார ஊழியர்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைப்பதில்லை. இவர்களுக்கு நிவாரண விலையில் மின்சார பைக் வழங்குவது அவர்களின் பொருளாதார சுமையைக் குறைப்பதுடன், பணிக்குத் தடையின்றி சமூகமளிக்க வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், குக்கிராமங்கள் தோறும் செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கு எரிபொருள் தேவையற்ற மின்சார வாகனங்கள் வழங்கப்படுவது, சுகாதாரச் சேவையின் வேகத்தை இருமடங்காக்கும் என்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பாக ஆரோக்கியத்தைப் பேணும் துறையைச் சேர்ந்தவர்கள் சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும். இது அரசாங்கத்தின் "பசுமை எரிசக்தி" கொள்கைக்கும் வலுச்சேர்க்கும். அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் இந்தத்திட்டம் ஒரு துறையுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. கொரோனா போன்ற சவாலான காலப்பகுதிகளில் நாட்டுக்காகத் தன்னுயிர் பாராது உழைத்த சுகாதாரப் பணியாளர்களை அங்கீகரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டு துறைகளும் பலப்படுத்தப்படும்போதே ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகரமுடியும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இந்த முன்னெடுப்பை ஒரு முன்னோடித் திட்டமாகக் கொண்டு, சுகாதார அமைச்சும் இதனுடன் இணைந்து செயற்பட வேண்டும். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அதே வரிச் சலுகை மற்றும் நிவாரண விலையில், சுகாதார ஊழியர்களுக்கும் இந்த மின்சார பைக்குகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments: