News Just In

3/23/2026 08:28:00 PM

ட்ரம்பின் மாற்றம் அ திரடி அறிவிப்பு! அடுத்த நொடியே எரிபொருள் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்!

ட்ரம்பின்  மாற்றம் அ திரடி அறிவிப்பு! அடுத்த நொடியே எரிபொருள் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்



ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மசகு எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 7.16% சரிவடைந்து, 104.43 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் விலை 7.59% என்ற பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு பீப்பாய் 90.77 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு "முழுமையான மற்றும் நிலையான தீர்வை" எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன்னர் அறிவித்திருந்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடி அல்லது மறைமுகமான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: