News Just In

3/23/2026 08:34:00 PM

மட்டக்களப்பில் வழமைபோன்று இயங்கும் தனியார் பேருந்துகள்!

மட்டக்களப்பில் வழமைபோன்று இயங்கும் தனியார் பேருந்துகள்!


இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கி வருகின்றது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தொடக்கம் சேவையிலி;ருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நன்மை கருதி தொடர்ந்து சேவையினை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பிலிருந்து தூர இடத்திற்கான சேவைகளும் குறுந்தூர சேவைகளும் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தனியார் பஸ்களுக்கும் உள்ளபோதிலும் மக்களின் நன்மை கருதி சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் தமது நிலைமையினை கருத்தில்கொண்டு தமக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்

No comments: