இறக்காமம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு திங்கட்கிழமை பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையும் தலைமை உரையும் பிரதேச செயலாளர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாசிர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரமழானின் ஆன்மீகப் பெறுமதிகளை விளக்கும் வகையில் அஷ்ஷெய்க் ஏ. நியாஸ் (இஸ்லாஹி) அவர்கள் இப்தார் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எல். முஸ்மி, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இறக்காமம் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.எப். அய்மா, கணக்காளர் எம்.ஆர். நசீமுல் ஹக், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிர்வாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். றசாக், நிர்வாக கிராம உத்தியோகத்தர் கே.எம். நிலுபுல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனுடன், இறக்காமம் பிரதேசத்தில் செயல்படும் பல திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், குவாசி நீதிபதி, மத்தியஸ்தர் சபை தவிசாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இறக்காமம் பிரதேச கிளை ஜம்மியதுல் உலமா சபை தலைவர், சமூக மற்றும் மத அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு ரமழான் மாதத்தின் ஆன்மீக ஒற்றுமையையும் சமூக ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றது
No comments: