சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உறுப்பினர்களுக்கிடையேயான இப்தார் நிகழ்வு 2026 மார்ச் 12 ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் உணவாக முற்றவெளியில் நடைபெற்றது.
ரமழான் மாதத்தின் ஆன்மிக உணர்வை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றுகூடி நோன்பு திறந்தனர்.
நிகழ்வு அல்குர்ஆன் ஓதலுடன் ஆரம்பமானதையடுத்து நிர்வாகச் செயலாளர் ஏ. பீர்முஹம்மத் அவர்கள் வரவேற்புரையாற்றி, ரமழான் மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தையும் சமூக ஒற்றுமையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதன்போது 2026 ஆம் ஆண்டிற்கான ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் அஷ்செய்க் ஐ.எல். அஹமட் (சர்கி) அவர்கள் ரமழான் மாதத்தின் ஆன்மிக சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
இறுதியில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றதையடுத்து அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர்.
No comments: