
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவம் அவற்றில் இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் எபிக் பியூரி (Operation Epic Fury) நடவடிக்கையின் போது நட்பு வான்வெளியில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது
ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பென்டகனின் ஆபரேஷன் எபிக் ஃப்யூரி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியதிலிருந்து இது நான்காவது அமெரிக்க விமான இழப்பாக பதிவாகியுளள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: