News Just In

3/23/2026 03:15:00 PM

நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவை முன்னிட்டு முக்கிய கலந்துரையாடல்

நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவை முன்னிட்டு முக்கிய கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் எதிர்வரும் நிர்வாகத் தெரிவை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த மார்ச் 03ஆம் திகதி, ஜும்மா பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைக்காக புதிய 49 நம்பிக்கையாளர்களுக்கு நியமனப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, இந்நம்பிக்கையாளர்களுக்கிடையில் நிர்வாகக் குழுத் தெரிவு எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், புதிய நம்பிக்கையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பள்ளிவாயல் நிர்வாகம் எதிர்காலத்தில் சிறப்பாக இயங்கி, நிந்தவூர் ஊரை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஊரையும் அதன் மக்களையும் நன்கு அறிந்த, நிர்வாகத் திறன் மற்றும் ஆளுமை கொண்ட தகுதியான ஒருவரை தலைவராகத் தெரிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து தவிசாளர் தெளிவுபடுத்தினார்

No comments: