காரைதீவு பிரதேச சபை ஏற்பாடு செய்த வருடாந்த நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு, நேற்று (17) சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) அவர்கள் ரமழான் மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் அதன் சமூகப் பண்புகள் குறித்து சிந்தனையை வழங்கினார்.
இந்த இப்தார் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மேடையாக இந்நிகழ்வு அமைந்தது எனப் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்
No comments: