News Just In

3/09/2026 03:51:00 PM

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ரியாஸ் ஆதம் தெரிவு – ஏ.சி. யஹியாகான் வாழ்த்து

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ரியாஸ் ஆதம் தெரிவு – ஏ.சி. யஹியாகான் வாழ்த்து


நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரியாஸ் ஆதம் அவர்களுக்கு ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த இழுபறிகளுக்குப் பின்னர் இந்தத் தவிசாளர் பதவி கிடைத்திருப்பது அந்தக் கட்சிக்கான ஒரு முக்கியமான வெற்றியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிந்தவூர் பிரதேச சபையை சிறந்த முறையில் முன்னெடுத்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் ரியாஸ் ஆதம் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மக்கள் நலன் நோக்கிய சேவைகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

No comments: