News Just In

3/13/2026 04:15:00 PM

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் உணவகங்கள் மீது சுகாதார பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் உணவகங்கள் மீது சுகாதார பரிசோதனை

நூருல் ஹுதா உமர்

புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான உணவு பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக விசேட சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசோதனைகளில், உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், அவற்றின் சேமிப்பு முறை, சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments: