News Just In

3/21/2026 11:19:00 AM

கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!

கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!



 வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர்ச்​சி​யாக ஏவு​கணைகளை வீசி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, கத்​தா​ரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்​ஜி) ஏற்​றும​தித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால் ஆண்​டுக்கு சுமார் 20 பில்​லியன் டாலர் வரு​வாய் இழப்பு ஏற்​படும் என கத்​தார் எனர்ஜி நிறு​வனத்​தின் தலைமைச் செயல் அதி​காரி​யும், அந்​நாட்​டின் எரிசக்தித்துறை அமைச்​சரு​மான சாத் அல்​-​காபி தெரிவித்துள்​ளார்.

இது குறித்து அவர் ராய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனத்​திடம் கூறிய​தாவது: ஒரு சகோதர முஸ்​லிம் நாடான ஈரானிட​மிருந்​து, அது​வும் இந்த புனித​மான ரமலான் மாதத்​தில் இத்​தகைய வேதனை மிகுந்த தாக்​குதலை நாங்​கள் எதிர்​பார்க்​கவே இல்​லை. இது ஒட்​டுமொத்த பிராந்​தி​யத்​தின் பாது​காப்​பை​யும் கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது. போர் நிறுத்​தம் ஏற்​பட்​டால் மட்​டுமே மீண்​டும் உற்​பத்​தி​யைத் தொடங்க முடி​யும்.

இந்​தத் தாக்​குதலில் கத்​தா​ரில் சேதமடைந்த கட்​டமைப்​பு​களைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்​டு​கள் வரை ஆகும். இதனால் ஆண்​டுக்கு 12.8 மில்​லியன் டன் எரி​வாயு விநி​யோகம் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இது சீனா, இந்​தியா உள்​ளிட்ட ஆசிய நாடு​களுக்​கும், ஐரோப்​பிய நாடு​களுக்​கும் பெரும் எரிசக்தி தட்​டுப்​பாட்டை உரு​வாக்​கும் என அஞ்​சப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

No comments: