News Just In

2/11/2026 09:48:00 AM

சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை!


சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை!





2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

எவரேனும் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இந்தச் சட்டங்களை மீறினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: