நூருல் ஹுதா உமர்
றசாக் முஹம்மட் அலி எழுதிய டித்வா அனர்த்தம் தொடர்பான நூல் வெளியீட்டு விழா (15) மாலை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் றாஷித் யெஹ்யா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
‘இயற்கையின் சீற்றங்களும் சமூக பொருளாதாரத் தாக்கங்களும்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நூல், டித்வா அனர்த்தத்தை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை ஆவணப்படுத்தியுள்ள சிறந்த ஆய்வுக் கையேடாகும். இந்நூல் தொடர்பான கருத்துரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், சிரேஷ்ட விரிவுரையாளர் அப்துல் றஸாக், எழுத்தாளர் சிராஜ் மசூர் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் முஹம்மட் நவாஸ் மற்றும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தௌபீக் ஆகியோர் பங்கேற்றனர்.
நூலாசிரியர் றசாக் முஹம்மட் அலி அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் நீண்டகாலம் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றவர். நூலகப் பணிக்காலத்தில் வாசிப்போரை நேசித்து ஊக்குவித்த அவர், பலருக்கும் அறிவியல் மற்றும் இலக்கிய வழிகாட்டியாக இருந்துள்ளார். பல்துறைக் கலைஞரான அவர் கலைத் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மேலும் அக்கரைப்பற்று ஹல்லாஜ் கலை மன்றம் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
டித்வா அனர்த்தம் தொடர்பான தகவல்களை தொகுத்து சமூக நினைவகமாக நிலைநிறுத்தும் இந்நூல், எதிர்கால ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு முக்கியமான ஆவணமாக அமையும் என விழாவில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

No comments: