News Just In

2/19/2026 11:15:00 AM

பொத்துவில் பிரதேச செயலக கலைஞர் சுவதம் 2025 விழா

பொத்துவில் பிரதேச செயலக கலைஞர் சுவதம் 2025 விழா


நூருல் ஹுதா உமர்

கலாசார அலுவல்கள் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கலாசாரத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் 2025” நிகழ்வு இன்று (18.01.2026) பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்களான வி. இலங்கேஸ்வரன், தி. கேதீஸ்வரன் மற்றும் பி. முகம்மட் அஸ்வர் ஆகியோர் அவர்களின் கலை பணிகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும், கவிஞரும் எழுத்தாளருமான பொத்துவில் அகமது பைசல் அவர்கள் தனது “கயறி” சஞ்சிகையை பிரதேச செயலாளருக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். சுபைர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம். றின்சான், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் விசேட அம்சமாக, கலைஞர் தி. கேதீஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் உருவப் படத்தை தனது கைகளால் வரைந்து, அதனை அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் கலாச்சார விழிப்புணர்வை மேலும் பலப்படுத்தும் என கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

No comments: