
மார்ச் மாதத்துக்கான நாடாளுமன்றத்தின் முதலாவது வார அமர்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமர்வு நடைபெறும் நாள்களில் மேற்கொள்ளப்படவுள்ள பிரதான நடவடிக்கைகள் வருமாறு:-
மார்ச் 4 ஆம் புதன்கிழமை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
மார்ச் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான சவால்கள் மற்றும் உரிமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் சபையில் விசேட விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இது குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments: