News Just In

1/31/2026 11:11:00 AM

ஜாஹீர் வெற்றிக்கிண்ணம் 2026 – சீருடை மற்றும் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வு

ஜாஹீர் வெற்றிக்கிண்ணம் 2026 – சீருடை மற்றும் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வு



மாளிகைக்காடு செய்தியாளர்

மாளிகா விளையாட்டுக்கழகம் நடத்தும் ஜாஹீர் வெற்றிக்கிண்ணம் 2026 இனை முன்னிட்டு, இவ்வருடத்திற்கான அதிகாரப்பூர்வ சீருடை அறிமுகம் மற்றும் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வு இன்று (30) மாளிகைக்காடு பாபா றோயாளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பிரபல சமூக சேவகரும், ஜாஹீர் பௌண்டஷன் தலைவருமான அப்துல் மஜீத் ஜாஹீர் அவர்களின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்த சுற்றுப்போட்டி மாளிகா விளையாட்டுக்கழக 4 அணிகளை கொண்ட போட்டியாக அமையவுள்ளது.

மாளிகா விளையாட்டுக் கழக தலைவர் எஸ். பஸ்லூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் ஜாஹீர் வெற்றிக்கிண்ணம் 2026 இந் பிரதானியான காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் பிரதம அதிதியாகவும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர், ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

விளையாட்டு ஆர்வலர்கள், அணித் தலைவர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு உற்சாகமான சூழலில் நடைபெற்றது. ஜாஹீர் வெற்றிக்கிண்ணம் 2026 போட்டித் தொடர், இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரவும், ஒற்றுமை மற்றும் நட்புறவை வலுப்படுத்தவும் முக்கியமான மேடையாக அமையும் என நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் தெரிவித்தனர்.

சீருடை மற்றும் வெற்றிக்கிண்ணம் அறிமுகம் செய்யப்பட்டதுடன், போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாளிகா விளையாட்டுக்கழக வீரர்கள், நிர்வாகிகள் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments: