கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக, கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் பெளதீக வளத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள், நேற்று (27.01.2026) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
இந்நிதி ஒதுக்கீட்டின் கீழ், சகல வசதிகளும் கொண்ட மலசலகூடத் தொகுதி அமைத்தல், பிரதி அதிபர் காரியாலய புனரமைப்பு, பாடசாலை உட் மற்றும் புறப்பாதைகள் புனரமைப்பு, பாடசாலை கட்டிடங்களுக்கு நிறப்பூச்சு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த அபிவிருத்தித் திட்டங்களின் திறப்பு விழா, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் நவாஸ் செளபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்சீவன், பிரதி அதிபர் எஸ்.எம். உவைஸ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் தாபித், ஊடகவியலாளர் எஸ். ஜனூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்வபிவிருத்தித் திட்டங்கள், பாடசாலையின் கல்வி சூழலை மேலும் மேம்படுத்துவதோடு, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு சிறந்த ஆதரவாக அமையும் என நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
No comments: