காத்தான்குடி பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காலை நேரில் சென்று பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சிபாரிசின் பேரில், ஐ ரோட் வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அல் அக்ஸா பள்ளிவாயல் வீதி அபிவிருத்தி மற்றும் பதுரியா பிரதேச வடிகாண் வேலைத்திட்டம் உள்ளிட்ட பணிகளையே அவர் இவ்வாறு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த வேலைத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.
கலந்துரையாடலின் போது, பெப்ரவரி மாதத்திற்கு முன்பாக அனைத்து அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் என அதிகாரிகள் உறுதியளித்ததுடன், குறித்த திட்டத்தின் மிகுதி நிதி தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
No comments: