News Just In

1/25/2026 03:50:00 PM

நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள்!

நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள்




சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கடந்த இரண்டு நாட்களாக அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், தாம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பினை இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

எனினும் நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

No comments: