News Just In

10/26/2025 05:19:00 PM

யாழில் செவ்வந்தி தங்கிய வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

யாழில் செவ்வந்தி தங்கிய வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!



இஷாரா செவ்வந்திக்கு இந்தியா தப்பிச் செல்வதற்காக படகுகளை ஒழுங்குபடுத்தி கொடுத்த நபரின் வீட்டிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக கூறப்படும் இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் யாழ்ப்பாண வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்போது, சந்தேக நபரிடமிருந்து இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், இரண்டு மகசின்கள் மற்றும் ஏழு 9MM நேரடி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பந்தப்பட்ட ஆயுதங்களை வழங்கிய 43 வயதுடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இஷாரா செவ்வந்தி நாடுகடத்திய சம்பவம் தொடர்பாக இதுவரை பத்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: