News Just In

10/25/2025 09:43:00 AM

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு



: பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும் இடையே கடும் சண்டை நடை​பெற்று வரு​கிறது. கத்​தார் நாட்​டின் சமரசத்​தின்​பேரில் கடந்த 19-ம் தேதி சண்டை நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. எனினும் இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களில் தொடர்ந்து பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது.

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் நாடு​களில் குனார் நதி பாய்​கிறது. இந்த நதி​யின் நீளம் 480 கி.மீ. ஆகும். நதி​யின் சுமார் 70 சதவீத தண்​ணீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வரு​கிறது. இதை தடுக்க குனார் நதி​யில் புதிய அணையை கட்ட ஆப்​கானிஸ்​தான் அரசு முடிவு செய்​திருக்​கிறது.

இதுகுறித்து ஆப்​கானிஸ்​தான் நீர்​வளத் துறை அமைச்​சர் முல்லா அப்​துல் லத்​தீப் மன்​சூர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “கு​னார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும். இந்த நதி​யின் மீது ஆப்​கானிஸ்​தான் மக்​களுக்கு முழு உரிமை இருக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஆப்​கானிஸ்​தான் நீர்​வளம், எரிசக்தி துறை செய்​தித் தொடர்​பாளர் மதி​யுல்லா அபித் கூறிய​தாவது: குனார் நதி​யில் புதிய அணையை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கான களஆய்வு நடத்​தப்​பட்​டு, விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்டு இருக்​கிறது. புதிய அணை​யின் மூலம் ஆப்​கானிஸ்​தானில் 1,50,000 ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 45 மெகா​வாட் மின்​சா​ர​மும் உற்​பத்தி செய்​யப்​படும். இந்த அணை​யால் நாட்​டின் உணவு தானிய உற்​பத்​தி, மின் உற்​பத்தி கணிச​மாக அதி​கரிக்​கும்.

குனார் நதி தொடர்​பாக ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் இடையே எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. எனவே எவ்​வித பிரச்​சினை​யும் இன்றி நதி​யில் பிரம்​மாண்ட அணையை கட்​டு​வோம். பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீர் தடுத்து நிறுத்​தப்​படும். இவ்​வாறு மதி​யுல்லா அபித் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ஆப்​கான் அரசு​வட்​டாரங்​கள் கூறுகையில், ‘‘அண்​மை​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்​டது. இதன்​காரண​மாக சிந்து நதி ஒப்​பந்​தத்தை இந்​தியா ரத்து செய்​தது. இதே பாணி​யில் குனார் நதி​யில் புதிய அணையை கட்டி பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க உள்​ளோம்’’ என்றன.

No comments: