
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளன.
2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டது.
பாடத்திட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்
புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஆரம்பக் கல்வி மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதாவது, தரம் 1, 2 முதலாம் பிரதான கட்டம், தரம் 3, 4 இரண்டாம் பிரதான கட்டம் மற்றும் தரம் 5 மூன்றாம் பிரதான கட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2027 ஆம் ஆண்டு முதல் முன்பள்ளிகளுக்காக ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான பாடத்திட்டக் கட்டமைப்பு தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியாளர்களின் பயிற்சித் திட்டம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், பாடசாலைகளை ஒன்றிணைத்து அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: