News Just In

10/25/2025 02:35:00 PM

சமூக ஊடக பதிவால் சபையில் திணறிய சதுரங்கா.சமூக ஊடக பதிவால் சபையில் திணறிய சதுரங்கா..!

சமூக ஊடக பதிவால் சபையில் திணறிய சதுரங்கா..!



அரசாங்கத்தின் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து Kingsberry Hotel இல் களுத்துறை மாவட்டத்திலுள்ள மதுபான Brewery License ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை இரு தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் முன்வைத்தேன்.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 24.10.2025. துணை அமைச்சர் சதுரங்கா பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். அவர் ஒரு சிறப்புரிமை (Privilege Issue) தொடர்பான விடையத்தை வெளிக்கொணரவில்லை, ஒரு தனிப்பட்ட அறிக்கையையே பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதை கூட துணை சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சிசிடிவி மற்றும் ஆவணங்களை சரிபார்க்குமாறு நான் அரசிடம் கேட்டுள்ளேன். ஆனால் தெளிவாகவே, அமைச்சர் விசாரணை வேண்டாம் என்பதற்காகத்தான் ஆரம்பத்திலேயே சிறப்புரிமை விவகாரத்தை முன்வைக்காமல் தவிர்த்தார்.

No comments: