News Just In

10/30/2025 04:01:00 PM

தேர்தல் திணைக்கள அலுவலக விடுதியில் தூக்கில் தொங்கிய உத்தியோகத்தர்; மட்டக்களப்பில் சம்பவம்

தேர்தல் திணைக்கள அலுவலக விடுதியில் தூக்கில் தொங்கிய உத்தியோகத்தர்; மட்டக்களப்பில் சம்பவம்









மட்டக்களப்பு நகரில் உள்ள மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தின் விடுதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் எருவில் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், தேர்தல் திணைக்களத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கடமையாற்றிவந்த நிலையில் இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதிவான் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: