
2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவதில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
2026இல் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தரம் 05 – தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான கல்வி செயல்பாட்டின் நேரம் பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
இதற்கமைய மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலைகளின் புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படுமென அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: