News Just In

7/15/2025 11:24:00 AM

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு பிரான்ஸ் தலைநகரில் சிலை!

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு பிரான்ஸ் தலைநகரில் சிலை


மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் நினைவு சிலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயல்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளன.

பாரிஸ் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளது.

மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர்.

No comments: