சிறீதர் தியேட்டரை தோண்ட தேவையில்லை, தீவு பகுதிக்குச் சென்று அங்கு பாருங்கள். அங்கே மனித புதைகுழி இருக்கும் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஈபிஆர்எல்எப், டெலோ, புளோட், மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் கூட்டம் தான் இராணுவத்தினருக்கு தமிழ் சமூகத்தினரை காட்டிக்கொடுத்தவர்கள். இவர்கள் தான் தமிழ் மக்கள் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள்.
சிறீதர் தியேட்டரை தோண்ட தேவையில்லை, தீவு பகுதிக்குச் செல்லுங்கள், அங்குதான் இவர்களுடைய ஆட்சியும் அநியாமும் நடந்தது.
டக்ளஸ் தேவானந்தாவோடு இணைந்திருந்தவர்களே, அவரோடு இருந்து விலகி உண்மைகளை ஊடகங்களிடம் தெரிவிக்கின்றார்கள்.
எனவே இதிலிருந்து டக்ளஸ் தேவானந்தா தப்பிப்பதற்கான சந்தர்ப்பம் ஒருபோதும் கிடையாது. வடக்கில் மக்கள் இவர்களை மதிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்
No comments: