News Just In

7/19/2025 06:22:00 AM

ராஜித சேனாரத்னவின் பிணை நிராகரிப்பு!

ராஜித சேனாரத்னவின் பிணை நிராகரிப்பு!




இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைத்திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு 2 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்து ராஜித சேனாரத்ன இந்த முன்பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.



No comments: