News Just In

7/16/2025 10:14:00 AM

மீண்டும் தோண்டப்படவுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழி!

மீண்டும் தோண்டப்படவுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழி



யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் இரண்டாவது அமர்வு, எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்பான அறிக்கை, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அவற்றை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் இரண்டாவது அமர்வை ஆரம்பிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் முதல் அமர்வின் போது 63 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளங் காணப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: