
கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சானி அபேசேகரவும் ஒரு சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இணையத்தள ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
இந்நிலையில், குறித்த வழக்கின் சாட்சியாளர்களில் ஒருவராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவும் பெயரிடப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
No comments: