News Just In

7/13/2025 04:33:00 PM

வரிச்சலுகை தொடர்பில் கலந்துரையாடல் : இலங்கை பிரதிநிதிகள் குழு அமெரிக்கா பயணம்

வரிச்சலுகை தொடர்பில் கலந்துரையாடல் : இலங்கை பிரதிநிதிகள் குழு அமெரிக்கா பயணம்




 இலங்கை மீதான அமெரிக்காவின் 30 வீத தீர்வை வரியை மேலும் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டின் பிரதிநிதிகள் குழு அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் இவர்கள் நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து மேலதிக வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம், தற்போதைய நிலைமை மற்றும் தீர்வை வரிக் கொள்கையால் ஏற்படக்கூடிய பொருளாதார சவால்கள் தொடர்பில் ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

No comments: