News Just In

12/04/2025 08:14:00 PM

மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து ஆரை யம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து ஆரை யம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் !



தற்பொழுது நிலவிய மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து ஆரை யம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான முன்னேற்பாடுகள் சம்பந்தமாக ஆரை யம்பதி பகுதிகளில் உள்ள கிராம சேவகர் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டது.  அதே நேரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக காணப்பட்ட கொள்கலன்களை அகற்றும் நிகழ்ச்சி திட்டமும் இதற்கு மேலதிகமாக ஜீவானந்த சிறுவர் விடுதியில் வெள்ள காலங்களில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்வும் மருத்துவ பரிசோதனையும் இடம்பெற்றது.

 இனிவரும் காலங்களில் பருவப் பெயர்ச்சி மழை பொழிவுக்கு சந்தர்ப்பம் உள்ளதால் அதிகமாக பாதிப்புக்கு உட்படும் காங்கேயனோடை பிரதேச மக்களை முன்னாயத்தமாக வெளியேற்றுவதற்காக ஒல்லி குளம் பாடசாலையும் தயார் நிலைக்கு உட்படுத்தப்பட்டு ஆரையம்பதி பகுதி பொதுச்சுகாதார பரிசோதகரினால் உறுதிப்படுத்தப்பட்டது. இத்துடன் இது சம்பந்தமாக மேலதிக முன்னேற்பாடுகளை ஆரை யம்பதி பகுதி பிரதேச செயலாளர் உடனும் கலந்தாலோசிக்கப்பட்டது. மழை காலங்களில் ஏற்படும் எலிக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாப்பதற்காக மக்களிடையே மருந்து விநியோகத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

No comments: