காத்தான்குடியால் மட்டும் 'டிட்வா' புயல் நிவாரணத்திற்கு மூன்றரைக்கோடிக்கு மேல் பங்களிப்பு
அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' புயலின் கோரத்தாண்டவம் நாடு முழுவதும் பல உயிர்களையும், உடமைகளையும் காவுகொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மனிதாபிமானப் பணியில், காத்தான்குடி மக்களும் தங்களது அளப்பரிய பங்களிப்பை, உணர்வுபூர்வமான உற்சாகத்துடன் வழங்கி வருவது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி மற்றும் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தாமாக முன்வந்து உதவி வருகின்றனர். குறிப்பாக, பல சிறுவர்கள் தங்கள் சேமிப்பான உண்டியல்களைக்கூட, எந்தவித விளம்பரமும் இன்றி, பாதிக்கப்பட்டுள்ளோரின் துயர் துடைக்க வழங்கிய காட்சி, மனிதநேயத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
காத்தான்குடி பொது நிறுவனங்களின் பாரிய முயற்சி
காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் சம்மேளனத்தின் தலைமையில், ஊர் தழுவிய ரீதியில் நிவாரணப் பொருட்களும், நிதியுதவிகளும் பெருமளவில் சேகரிக்கப்பட்டுள்ளன.
பொருட்களின் சேகரிப்பு:
சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக ரூபா 5,000 பெருமதியான பொதிகளாக மாற்றப்பட்டுள்ளன
இதில் முதற்கட்டமாக 500 பொதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் மக்களுக்கு சம்மேளனத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.
அதே பெருமதியான மேலும் 4,500 பொதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு (Packing) வருவதாக அறிய முடிகின்றது.
மொத்தமாகப் பொருட்களின் மதிப்பு:
5,000 பொதிகள்x ரூபா 5,000 = ரூபா 25,000,000 (25 மில்லியன்) ஆகும்.
நிதியுதவிகள்:
சம்மேளனத்தின் தலைமையில் ஊர் மக்களிடம் அண்ணளவாக ரூபா 3,000,000 நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது.
இன்னும் பலரும் பணம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதால், இந்தத் தொகை 5 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொருட்கள் மற்றும் நிதியின் மொத்த மதிப்பிடப்பட்ட ஆரம்பத் தொகை: ரூபா 25,000,000 + ரூபா 5,000,000 = ரூபா 30,000,000 (30 மில்லியன்).
12/04/2025 06:06:00 PM
மனிதாபிமானப் பணியில், காத்தான்குடி மக்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: