News Just In

12/04/2025 05:52:00 PM

ஒரு நாள் சம்பளம் குறித்த அரச ஊழியர்களின் திடீர் தீர்மானம்


ஒரு நாள் சம்பளம் குறித்த அரச ஊழியர்களின் திடீர் தீர்மானம்



ஊவா மாகாண சபையின் அரச ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மாகாணத்தின் மறுகட்டமைப்புக்காக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

மாகாணத்தில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளும் இதற்கு தங்கள் சம்மதத்தை தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பாக விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: