News Just In

12/08/2025 08:32:00 AM

மட்டக்களப்பில் நேற்று பதற்றம் - 22 வயது இளைஞன் மரணம்

 மட்டக்களப்பில் நேற்று பதற்றம் - 22 வயது இளைஞன் மரணம் பொலீஸ் நிலையத்திற்கு முன்னால் அமைதி இன்மை!


மட்டக்களப்பு உப்போடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் (02) திகதி புதுநகர் விமானப்படை படையினர்(air force)சிலருடன் கைகலப்பில் ஈடுபட்டு பின்னர் பொலிசாரினால் கைதாகியிருக்கின்றார்.
அதன் பின்னர் உடல்நல குறைபாடு ஏற்பட்டதாக வைத்தியசாலையில் சிறைச்சாலை பொலீசாரால் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று (07) மட்டக்களப்பு தலைமையக பொலீஸ் முன்பாக இளைஞருடைய குடும்ப உறவினர்களுக்கும் பொலீசாருக்கும்இடையே "இளைஞர் பொலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் " என கூறி பொலீஸ் நிலையத்துக்கு முன்னால் அமைதி இன்மை ஏற்பட்டது.

No comments: