
பொதுக் கழிப்பறையினைப் பயன்படுத்துவதற்கு கஷ்டப்பட்டு சிறுநீரை அடக்கி வைக்கும் வழக்கம் பலருடன் இருக்கும் நிலையில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்று பலரும் வெளியிடங்களுக்குச் சென்றால் சிறுநீரை அடக்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவை பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக பெண்களுக்கு கூடுதல் அபாயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நேரம் அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை அதிகரிப்பதுடன், எரிச்சல் மற்றும் நீண்டகால பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
மேலும் சிறுநீர்ப்பையின் தசைகள் செயல்படும் விதத்தையும் பாதிப்பதுடன், பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சாதகமான சூழலையும் உருவாக்குகின்றது.
இதனால் சிறுநீரக பாதை தொற்று மட்டுமின்றி, சில தருணங்களில் சிறுநீரக தொற்றும் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது.
இடுப்பு, தலை மற்றும் தசை பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் பாரம்பரிய இந்திய கழிப்பறைகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானதாக மருததுவர்கள் கூறுகின்றனர்.
ஆதலால் முடிந்தவரை பொது இடங்களில் சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, சிறுநீரை அடக்கி வைப்பதைத் தவிர்க்கவும்.
No comments: