விடுதலை புலிகளின் தலைவரால் வாழும் போதே மாமனிதர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவரும், 70 வருட விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழும் வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவருமான மாமனிதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் "விலங்கை உடைத்து" என்னும் தன் வரலாற்று நூல் அறிமுக விழா இலண்டனின் கிரீன்போர்ட் (Greenford) பகுதியில் கடந்த சனிக்கிழமை (யூன் 21) பிரம்மாண்டமான முறையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட விடுதலை கானங்கள் இசை நிகழ்ச்சியும் இசைமேதை கலைமாமணி தமிழ் இசை வேங்கை T L மகாராஜன் தலைமையில் இடம்பெற்றது.
No comments: