News Just In

5/19/2025 06:42:00 PM

மட்டக்களப்பில் கோர விபத்து ஒருவர் பலி!

மட்டக்களப்பில் கோர விபத்து ஒருவர் பலி!




வாழைச்சேனையில் டிப்பர் – உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (19) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த டிப்பர் வண்டியும், உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில், உழவு இயந்திர சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: