இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் திருகோணமலைக்கு விஜயம் செய்வதை அநுர அரசு விரும்பவில்லை என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்திய பிரதமர் திருகோணமலையை மையப்படுத்திய இந்துக்கள் மகா சங்கம் இந்திய பிரதமரை திருகோணேஸ்வர ஆலயத்திற்கு அழைத்த நிலையில், அந்த பயணத்திற்கு இலங்கை அரசு அனுமதியளிக்கவில்லை.
அங்கு பாதுகாப்பு பிரச்சினைகள் என கூறி இலங்கை அரசு அதனை நிராகரித்ததாக கூறப்படுகின்றன.
திருகோணமலை நோக்கி அவர் செல்வதை இலங்கை அரசு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
ஆனால் அநுராதபுரத்திற்கு புனித பூஜையொன்றிற்காக செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” என தெரிவித்தார்
No comments: