
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா தொடருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் புதிய நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
வழக்கமாக இரவு 7 மணிக்குப் புறப்படும் தொடருந்து வெள்ளிக்கிழமை முதல் இரவு 11 மணிக்குத் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அடிக்கடி குறித்த தொடருந்தில் யானைகள் மோதுண்டு உயிரிழப்பது வழக்கமாக உள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தைத் தொடருந்து திணைக்களம் எடுத்துள்ளது
No comments: