News Just In

2/12/2025 11:37:00 AM

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு! இன்று வெளியாகும் தீர்மானம்!

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு! இன்று வெளியாகும் தீர்மானம்



நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

No comments: