News Just In

1/29/2025 07:26:00 PM

அவசர சிகிச்சைக்காக மாவையை வெளிநாடு கொண்டு செல்ல ஆலோசனை!

அவசர சிகிச்சைக்காக மாவையை  வெளிநாடு கொண்டு செல்ல ஆலோசனை!



தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில் அவரை சிகிச்சைக்காக சென்னைக்கோ அல்லது சிங்கப்பூருக்கோ கொண்டு செல்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

மாவை சேனாதிராஜா வீட்டில் வழுக்கி விழுததை அடுத்து நேற்று காலை (28) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியகட்சிகள் மாவை சேனாதிராஜாவை காண மருத்துவமனைக்கு படையெடுத்ததாக கூறப்படுகின்றது.


No comments: