அபு அலா
மேல் மாகாணத்தில் ஆட்டோ தொழிலில் தங்களது வாழ்வாதாரத்தை பெற்று வாழும் மூவின ஆட்டே ஓட்டுனர்கள் 100 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கும் நிகழ்வு கொழும்பு BMICH இல் இடம் பெற்றது.
மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வின்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த சமூக சேவையாளர் தியாகி வாமேந்திரனின் சொந்த நிதியிலிருந்து குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிதி உதவித் தொகையினை மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் பிரதித் தலைவர் எப்.எம்.ஷரீக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments: