News Just In

12/01/2024 02:17:00 PM

வெள்ளத்திற்கு அடைக்கலம் தேடிய காட்டு யானைகளால் குடியிருப்புக்கள் சேதம்!

வெள்ளத்திற்கு அடைக்கலம் தேடிய காட்டு யானைகளால் குடியிருப்புக்கள் சேதம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சமீபத்திய சீரற்ற காலநிலை பெருமழை வெள்ளத்தினால் காட்டு யானைகள் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து மேடான மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி அடைக்கலம் புகுந்துள்ளடன் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு - செங்கலடி, கொம்மாதுறைதீவுப் பகுதியில் அடைக்கலம் தேடிய காட்டு யானைகள் அங்குள்ள மக்களின் குடிசைகளைச் சேதப்படுத்தி பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
சமீப சில நாட்களாக இப்பகுதியில் அலைந்து திரியும் காட்டு யானைகளால் தாம் இராப் பொழுதை மிகுந்த அச்சமும் பீதியும் கலந்த உயிர்ப்போராட்டத்தில் கழிக்க வேண்டியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வறிய மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் சமீபத்திய இயற்கை இடரினால் பல்வேறு வழிகளில் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

No comments: