News Just In

10/26/2025 05:27:00 PM

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு




வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிகமாக, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்..

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்,

அதோடு திருகோணமலை மாவட்டத்திலும் மணி நேரத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வரும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மக்கள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: