News Just In

12/03/2024 01:21:00 PM

சாய்ந்தமருது பிரதேச வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !

சாய்ந்தமருது பிரதேச வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை 



மாளிகைக்காடு செய்தியாளர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் அவர்களின் தலைமையிலான குழுவினர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச வெள்ள அனர்த்தத்தின் பின்னர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments: