அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை
அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நேற்றையமுன்தினம் தினம் திருகோணமலையில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் திறந்த குழு இசை மற்றும் இரண்டு தனியிசைபோட்டிகளில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பங்குபற்றியிருந்தது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை தேனக இசைச்சுடர் திருமதி சாந்தினி தர்மநாதனின் பயிற்றுவிப்பில் மாவட்ட, மாகாண மட்டபோட்டிகளில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டியில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் குழு இசை தேசியத்தில் முதல் இடத்தினையும் ஜாவளி தனியிசையில் இரண்டாம் இடத்தினையும் திருப்புகழ் தனியிசையில் மூன்றாம் இடத்தினையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சுவீகரித்தது.
சாதனை படைத்த மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் மாணவர்களும் ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: