உலக மக்களை பிரமிக்க வைத்த இலங்கைக்கான தங்க விருது
2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் லண்டன்நகரில்நடைபெற்ற2024இல்இந்தவிருதுவழங்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் இருந்தது.இலங்கையை Most Desirable Islandபெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா தம்புள்ள குகைகள் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகை விருதுகளில் இரண்டாவது இடத்தை தாய்வானும் மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது.சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
11/07/2024 07:16:00 PM
உலக மக்களை பிரமிக்க வைத்த இலங்கைக்கான தங்க விருது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: