News Just In

11/05/2024 07:18:00 PM

‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும்பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீடு !

 கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும்பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீடு 


வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 30.10.2024 திகதி இடம்பெற்ற கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய ‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்


இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன்,விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ம.ஜெகு, மாகாண நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.சுதாகரன், கலாநிதி.பா.கேதீசன் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியல் பீடம் கிளிநொச்சி, ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் உயர் பதவிகளில் வகித்த முன்னைநாள் உயர் அதிகாரிகள் என பலரும் கொண்டனர்.

பிரதிப் பணிப்பாளர் நீர்பாசன திணைக்களம் எந்திரி.த.ராஜகோபு போன்ற உயர் அதிகாரிகள் கலந்துநிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் உயர் பதவிகளில் வகித்த முன்னைநாள் உயர் அதிகாரிகள் பலரும் கொண்டனர்.

கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய ‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’ என்ற புத்தகத்தில் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற நீர் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் அவற்றினை சேமித்து வைப்பதற்கு உரிய வழிமுறைகளையும், மாகாணத்தில் உருவாக்க வேண்டிய பொறிமுறை மற்றும் உரிய நீர் வளங்களை எமது மாகாணத்துக்கு பகிர்ந்து அளித்தலை மேற்கொள்ளுதல், அதற்கான பொறிமுறைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் மழை கிடைக்கின்ற காலப்பகுதிகளில் குளங்களில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் இவ்வாறு வெளியேற்றப்படும் நீரை குளங்களில் சேமித்து வைக்க சரியான பொறி முறைகள் உருவாக்கப்படுதல் வேண்டும். எனவும் குளங்களின் கொள் அளவினை அதிகரித்தல் தொடர்பாகவும் கருத்துரைத்தார்.

உலகில் பல பிரதேசங்களில் நீர்வளம் குறைவாக காணப்பட்டாலும் அவை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து உள்ளன. எமக்கு அனைத்து வளங்களும் இருந்தும் அதனை சரியான விதங்களில் கையாளாப்படாமல் எமது பிரதேசம் பின்தங்கி காணப்படுகின்றது. எமது பிரதேசங்களில் நீர்வளம் இருந்தும் நாங்கள் உரிய திட்டமிடல் இன்றி முறையாக பயன்படுத்தாமல் இருப்பதாக கூறினார்

நீர் வளத்தின் தரம், அளவு ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமானவை எனவே எதிர்காலத்தில் எங்களுக்கு கிடைக்கின்ற நீரை இயன்ற அளவு பயன்படுத்தக் கூடிய வகையில் சேமித்து பயன் பெறுவதன் மூலம் உச்ச பயன்பாட்டை பெற்றுக் கொள்ள உரிய செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இரணைமடு நன்னீர் திட்டமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நீரை கொண்டு வருவதற்காகவே திட்டமிடப்பட்டது. ஆனாலும் செயற்ப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக திட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை. கடந்த வருடமும் இரணைமடு குளத்தில் இருந்து அதிகளவான நீர் கடலுடன் கலக்கப்பட்டதாக அறியமுடிகிறது .

எனவே இனிவரும் காலங்களில் நீர் வள திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது எனவும் திட்டங்களினால் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்தார்

No comments: