News Just In

11/16/2025 08:49:00 PM

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் மூன்று  நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கன மழை மேலும்மூன்று  நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது.அதாவது எதிர்வரும் 19ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும்.
எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் தேதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அக்கால பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும்.

கடந்த பல ஆண்டுகளாக வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதியில் அதிகளவான மழையை பெற்றிருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் இந்த முறை குறைவான மழையை பெற்றிருக்கின்றன.
வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என நம்புவோம் என தெரிவித்துள்ளார்.

No comments: